TNSTC Recruitment 2023 – Apply for 685 Vacancies

TNSTC Recruitment 2023

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு – TNSTC Recruitment 2023

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் கீழ்க்கண்ட பணிகளான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNSTC Recruitment 2023

1. பணியின் பெயர் : ஓட்டுநர் உடன் நடத்துநர்

காலியிடங்கள் : 685

வயதுவரம்பு  :

  1. 01.01.2023 அன்று 24 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
  2. 01.01.2023 அன்று பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் (BC/MBC/SC/ST)  45 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.
  3. முன்னாள் இராணுவத்தினருக்கு 01.01.2023 அன்று பொது வகுப்பினர் (OC) 50 வயது பூர்த்தியாகாமலும் மற்றும் இதர வகுப்பினர் (BC/MBC/SC/ST) 55 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :  

  1. குறைந்தபட்சம் 10- ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

முக்கிய தகுதிகள்:

  1. செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2023-க்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும்.

உயரம் மற்றும் எடை:

  1. உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ.
  2. எடை 50 கிலோகிராம் இருக்க வேண்டும்.

உடல் தகுதி :

  1. எவ்விதமான உடல் அங்க குறைபாடு (Physical deformity) அற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. கண் பார்வைத் திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.
  3. காது கேட்கும் திறன் குறைபாடு இன்றி இருக்க வேண்டும்.
  4. இரவுக் குருடு மற்றும் நிறக்குருடு குறைபாடு இன்றி  தெளிவான கண் பார்வை இருத்தல் வேண்டும்.
  5. வளைந்த கால்கள், முழங்கால்கள் ஓட்டுதல் மற்றும் சமமான பாதங்கள் ஆகிய குறைபாடுகள் இன்றி இருத்தல் வேண்டும்.
  6. சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தம் முறை:

  1. விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.1180 /- ஐ (18% ஜிஎஸ்டி உட்பட) மற்றும் SC / ST பிரிவினருக்கு ரூ. 590 /- ஐ (18% ஜிஎஸ்டி உட்பட) விண்ணப்பதாரர்கள் இணைய வழிதளம் முறையில் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இணைய வங்கி / பற்று அட்டை / கடன் அட்டை மூலம் செலுத்த வேண்டும்.
  2. விண்ணப்பதாரர்கள் சேவை கட்டணமும் சேர்த்து செலுத்த வேண்டும்.

தேர்வு அனுமதி சீட்டு :

  1. தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வில் கலந்து கொள்ள அனுமதி சீட்டுஇரண்டாம் நி இணைய வழிதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  2. மேலும் தேர்வாளர்கள் Online மூலம் விண்ணப்பிக்கும் போது தெரியப்படுத்தப்படும் பதிவு எண் (Registration No) விபரத்தை பத்திரமாக குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. மேற்படி பதிவு எண்ணை உபயோகப்படுத்தி மட்டுமே தேர்வு அனுமதிச் சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும். 

Selection Process in TNSTC Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் கீழ்க்கண்ட தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • எழுத்துத் தேர்வு
  • செய்முறைத் தேர்வு
  • நேர்முகத் தேர்வு 

தேர்வு நடைமுறை : 

  1. எழுத்துத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்கள்.
  2. அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விற்கு பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படுவர்கள்.
  3. வினாத்தாள் தமிழில் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கும்.
  4. விண்ணப்பதாரர்கள் 100 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
  5. எழுத்து தேர்வு பத்தாம் வகுப்பு பொதுத்தமிழ் (50 மதிப்பெண்கள்), பொது அறிவு மற்றும் தொழில்முறை திறனறி தேர்வு (50 மதிப்பெண்கள்) ஆகிய பாடங்களை உள்ளடக்கியது. பொதுத்தமிழ் தேர்வில் கட்டாய தேர்ச்சி (40 சதவீதம் – 20 மதிப்பெண்கள்) அவசியம், பொதுத்தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர்களின் பொது அறிவு மற்றும் தொழில்முறை திறனறி தேர்வு தாள் மதிப்பீடு செய்யப்பட்ட மட்டாது. மேலும் ஓட்டுநர்  / நடத்துநர் திறன் தேர்வு (நடைமுறை) மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்பட மட்டார்கள்.
  6. எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனத்திற்கான அரசு விதிமுறைகளின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட உடற்தகுதி சரிபார்ப்பு, சான்றிதழ் சரிப்பார்ப்பு, ஓட்டுநர் / நடத்துநர் திறன் தேர்வு (நடைமுறை – 80 மதிப்பெண்கள்) மற்றும் நேர்காணலுக்கு (20 மதிப்பெண்கள்) உட்படுத்தப்படுவர்கள்.
  7. விண்ணப்பதாரர்கள் மொத்தமாக 150 மதிப்பெண்களுக்குப் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  8. தகுதியான விண்ணப்பதாரர்கள் பெற்ற தொழில்முறை திறனறி தேர்வு மதிப்பெண்கள்,  ஓட்டுநர் / நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  9. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பல்வேறு அரசு விரைவு போக்குவரத்துக் கழக  பணிமனைகளில் பணியமர்த்தப்படுவர்கள். நியமன அதிகாரியால் மட்டுமே ஓட்டுநர் உடன் நடத்துவரகள்குக் பணிமனை ஒதுக்கீடு செய்யப்படும்.

How to Apply for TNSTC Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.arasubus.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்  விண்ணப்பிக்கவும்.

TNSTC Driver cum Conductor Recruitment 2023

last date for tnstc driver and conductor post :

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.09.2023

TNSTC Official Notification & Application Link:

TNSTC Official Website Career page: Click Here

TNSTC Official Notification PDF: Click Here

TNSTC Online Application Form: Click Here

 

குறிப்பு :

  1. சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது.
  2. விண்ணப்பதாரர்கள் முறையே எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  3. விண்ணப்பக்கட்டணம் எந்த காரணத்தை முன்னிட்டு திரும்ப வழங்கப்படமாட்டாது.
  4. விண்ணப்பதாரர்கள் எழுத்துதேர்வு / செய்முறைத் தேர்வு / நேர்முகத்தேர்விற்கு வருவதற்கான பயணச்செலவு மற்றும் இதர செலவு தொகை ஏதும் வழங்கப்பட்டமாட்டாது.
  5. இந்நியமனம் தொடர்பாக நடத்தப்படும் எழுத்து / செய்முறை /  நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிய www.arasubus.tn.gov.in  என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
  6. இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் 18.08.2023 மதியம் 01.00 மணி முதல் 18.09.2023 மதியம் 01.00 மணி வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு இணைப்பு முடக்கப்படும்.
  7. இதர விபரங்கள் போக்குவரத்து கழக பொதுப்பணி விதிகள் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டது. தகுதி பெறாதவர்களின் விண்ணப்பங்களை எவ்வித அறிவிப்புமின்றி நிராகரிக்க போக்குவரத்துக் கழகத்திற்கு அதிகாரம் உண்டு.
  8. சென்னை உயர்நீதிமன்றம் W.P.No.20290 of 2012, நாள்: 27.08.2014 மற்றும் W.A.No.1737 of 2014, நாள் : 20.06.2019 வழக்கில் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதல் படி இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.  

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்