தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் (trb recruitment ) காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு 2207 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:01/2021
பணியின் பெயர் : Post Graduate Assistant
காலியிடங்கள் : 2207
காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள பாடப்பிரிவுகள் விபரம் வருமாறு :
1. Bio Chemistry
2. Botany
3. Chemistry
4. Commerce
5. Economics
6. English
7. Geography
8. History
9. Indian Culture
10. Mathematics
11. Physical Education
12. Physics
13. Political Science
14. Tamil
15. Zoology
பாடவாரியாக ஏற்பட்டு உள்ள காலியிடங்கள், காலியிட பகிர்வு ஆகியவற்றை இணையதளத்தில் பார்க்கவும்.
சம்பளவிகிதம் : ரூ. 36,900 – 1,16,600
வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்று பி.எட், பட்டம் பெற்றிருக்க வேண்டும். முறையான கல்வித்திட்டத்தின் கீழ் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
trb recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : TRB – ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் முக்கிய பாடத்திலிருந்து (Main Subject) 110 – மதிப்பெண்களுக்கும், Education Methodology – 30 மதிப்பெண்களுக்கும், GK – 10 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். மொழித்தாள் தவிர இதர பாடங்களுக்கு ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500.; (SC / ST / SCA – பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ. 250). இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 9.11.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் Project Fellow வேலை :-
திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் Project Fellow பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
பணியின் பெயர் : Project Fellow
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 10,000
ஒப்பந்த காலம் : 3 வருடம்
கல்வித்தகுதி : Physics / Applied Physics / Materials Science இதில் ஏதாவது ஒரு பாடப் பிரிவில் M.Sc / M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து 10.11.2021 தேதி நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளவும்.
முகவரி :
Prof. S . Arumugan Director,
Center for High Pressure Research School of Physics,
Bharathidasan University,
Tiruchirappalli – 620 024.
Tel.NO : 0431 – 2407118, 95009 10310.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.bdu.ac.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
trb recruitment
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant பணிகள் :-
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி துறையில் Professional Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Ref.Advt.No.001/MIT/RPT/Professional Assistants / 2021
1. பணியின் பெயர் : Professional Assistant – I
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 797 (Per day)
கல்வித்தகுதி : Rubber & Plastics Technology / Plastics Technology / Polymer Technology / Chemical Engineering / Mechanical Engineering இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Professional Assistant – II
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 748 (Per day)
கல்வித்தகுதி : Computer Science – ல் MBA முதுகலைப் பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து 11.11.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் துறையைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Dean,
Madras Institute of Technology Campus,
Anna University,
Chromepet,
Chennai – 600 044.
trb recruitment
.