TNPSC Group -II / IV தேர்விற்கான தமிழ் இலக்கியம் – tnpsc group 2 question paper
சிலப்பதிகாரம் : –
சிலப்பதிகாரம் பற்றிய முழு தகவல்கள் கொண்ட தொகுப்பினை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வில் (tnpsc group 2 question paper) சிலப்பதிகாரம் பற்றிய கேட்கப்படும் கேள்விகள் முழுமையாக இத்தொகுப்பில் காணலாம்.
tnpsc group 2 question paper
ஆசிரியர் : இளங்கோவடிகள்
பெற்றோர்கள் : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – நற்சோணை
தமையன் : சேரன் செங்குட்டுவன்
ஊர் : சேர நாடு
காலம் : கி.பி 2 -ம் நூற்றாண்டு
சமயம் : சமணம்
சமகாலத்தவர் : சீத்தலைச் சாத்தனார்
சிறப்புப் பெயர் : சமய வேறுபாடு கருதா துறவி
வரிகள் : 5001 வரி- இசைப்பாட்டு
* சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம். சிலம்பால் அதிகரித்த வரலாறு.
* சிலம்பதிகாரம் மூன்று காண்டங்களையும், முப்பது காதைகளும் கொண்டது.
* புகார்காண்டம் – 10 காதைகள் (மங்கலவாழ்த்து காதை – நாடுகாண் காதை)
* மதுரைக்காண்டம் – 13 காதைகள் (காடுகாண் காதை – கட்டுரைக் காதை)
* வஞ்சிக்காண்டம் – 7 காதைகள் (குன்றக்குரவை காதை – வரந்தகு காதை)
* சிலப்பதிகாரம் வேறு பெயர்கள் :
tnpsc group 2 question paper
1. உரையிட்டப்பட்ட பாட்டுரைச் செய்யுள்
2. முத்தமிழ் காப்பியம்
3. முதற்காப்பியம்
4. ஒற்றுமைக் காப்பியம்
5. குடிமக்கள் காப்பியம்
6. நாடகக் காப்பியம்
7. இரட்டைக் காப்பியம்
8. புரட்சிக் காப்பியம்
* பைந்தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் உணர்த்தும் உண்மைகள்
“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”
“உரைசால் பத்தியை உயர்ந்தோர் ஏத்துவர்”
* காலத்தாலும், கதைத் தொடர்பாலும் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இரட்டைக்காப்பியம் என வழங்குவர்.
* “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக” என்று கூறியவர் சீத்தலைச் சாத்தனார்.
* நாட்டுதும் யாமோர் பாட்டுரைச் செய்யுள் என்று கூறியவர் இளங்கோவடிகள்
* தலைக் கோலரிவை பட்டம் பெற்றவர் மாதவி.
* யாரையோ நீ மடக்கொடி என கண்ணகியை கேட்டவன் பாண்டியன்
* பிடர்தலை பீடம் ஏறிய மடக்கொடி என கொற்றவையுடன் கண்ணகியை ஒப்பிட்டு கூறியவன் வாயில் காவலன்.
* மடமொழி எனப்படுபவள் கோப்பெருந்தேவி (கொம்பினை ஒத்த மடப்பிடி : பாஞ்சாலி. கூறியவர் திருதராட்டிரன்)
* பாவின வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்.
* இசை நாடகமே சிலப்பதிகாரக் கதையின் உருவம்.
* இந்நூலக்கு உரை எழுதியவர் இருவர். அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்.
* மற்றொருவர் விளக்கமாக உரை எழுதிய அடியார்க்கு நல்லார்.
* சிலப்பதிகாரம் ஆசிரியப்பாவாலும், கொச்சகக்கலிப்பாவாலும் ஆனது.
* “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” எனப் பாரதியார் போற்றியுள்ளார்.
*
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை
என இளங்கோடிகளைப் புகழ்கிறார் பாரதியார்
tnpsc group 2 question paper
* தேனிலே ஊறிய சுவை தேறும் சிலப்பதிகாரம் என கவிமணி போற்றியுள்ளார்.
* தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோ எனக் கூறியவர் – மு.வ
* ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை நூல் முழுமைக்கும் உள்ளது.
* பெண்ணுக்கு பெருமை தரும் முதல் காப்பியம்
* கோவலனின் நகரம் புகார்
* கோவலினின் தந்தை மாசாத்துவான்.
* கண்ணிகியின் தந்தை மாநாய்கன்.
* மாதவியின் தாய் சித்திராபதி
* கோவலன் – மாதவியின் மகள் மணிமேகலை
* பாண்டிய மன்னனின் மனைவி கோப்பெருந்தேவி
* கண்ணகியின் தோழி தேவந்தி
* மாதவியின் தோழி வயந்தமாலை.
* மணிமேகலையின் தோழி சுதமதி
* மாதவி 11 வகை ஆடல் கற்றவள்
* கோவலனின் நண்பன் மாடலன்
* கோவலனை மீண்டும் வரச்சொல்லி மாதவி தனது முதல் கடிகத்தை வயந்தமாலையிடம் கொடுத்து அனுப்பினாள்.
* இரண்டாவது கடிதத்தை கோவலனிடம் கொடுத்தவன் கோசிகாமணி.
* கோவலன்-கண்ணகியை மதுரைக்கு அழைத்துச் சென்றவர் கவுந்தியடிகள் என்ற பெண் துறவி.
* இவர்களுக்கு மதுரையில் அடைக்கலம் கொடுத்தவர் மாதிரி (ஆய்ச்சியர்)
* மாதரியின் மகள் ஐயை
tnpsc group 2 question paper
* கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப் பரல்களை உடையது.
* கோப்பெருந்தேவியின் காற்சிலம்பு முத்துப்பரல்களை உடையது.
* கோவலனை கள்வன் எனக் கூறியவன் – பொற்கொல்லன்.
* இந்திர விழா மழைக்கடவுளான இந்திரனை வேண்டி 28 நாட்கள் நடைபெறும்.
* சிலப்பதிகாரத்தில் 5 வகை மன்றங்கள் குறிப்பிடப்படுகின்றன.
* தெய்வமன்றம், இலஞ்சி மன்றம், வெள் இடைமன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம்.
* வரி என்றால் இசைப்பாடல் என்று பொருள். வரி எட்டு வகைப்படும்.
* வேட்டுவ வரியில் பாடப்படும் கடவுள் – காளி
* ஆய்ச்சியர் குரவையில் பாடப்படும் கடவுள் – கண்ணன்
* பந்தடித்து விளையாடும் போது பாடுவது – கந்துக வரி.
* ஊஞ்சலாடும் போது பாடுவது – ஊசல் வரி
* நெல்குற்றும் போது பாடுவது – வள்ளைப்பாட்டு
* கழங்காட்டத்தின் போது பாடுவது – அம்மானை வரி
* ஊசல் வரியில் பாடப்படுவன் – சேரன்
* அம்மானை வரியில் பாடப்படுவன் – பாண்டியன்
* முல்லை நில மக்கள் நிகழ்த்தும் கூத்து – ஆய்ச்சியர் குரவை.
* குறிஞ்சி நில மக்கள் நிகழ்த்ததும் கூத்து – குன்றக் குரவை
* குரவை என்பது 7 முதல் 9 பேர் கைகோத்து ஆடுவது
* வள்ளைப்பாட்டு என்பது உலக்கைப்பாட்டு
* கண்ணகிக்கு கோயில் கட்டியவன் – சேரன் செங்குட்டுவன்
* கண்ணகிக்கு சிலை அமைக்க கல் எடுத்த மலை – இமயமலை
* இந்திரவிழா குறித்துக் கூறும் நூல் – சிலப்பதிகாரம், மணிமேகலை
* நாட்டுப்புறப் பாடல்களுக்கு முதன்மை கொடுத்து முதன் முதலில் பாடியவர் – இளங்கோவடிகள்
* 11 வகை ஆடல் : அல்லி, கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்லாடல், துடியாடல், கடையம், பேடு, மரக்கால், பாவைக்கூத்து.
* திருமகள் ஆடியது – பாவையாடல்
* சிவன் ஆடியது – பாண்டரங்கம்
* முருகன் ஆடியது – துடி
* யாழ்கள் – பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ்
மேற்கோள்கள் :
tnpsc group 2 question paper
” பதிஎழு அறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டு”
“கள்வனோ அல்லன்; கருங்காயற்கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணும் இவ்வூர்”
” முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து, நடுங்குதுயர் உறுத்தப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”
” பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”
“புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி”
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.