immt recruitment 2021

இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI)-யில் Assistant Manager பணிகள் -sidbi 2022

இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் (sidbi) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

sidbi

பணியின் பெயர் : Assistant Manager (Grade ‘A’) 

காலியிடங்கள் : 100 (UR-43, OBC-24, SC-16, ST-7, EWS-10)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Law / Engineering கல்வி பிரிவை சேர்ந்த ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது Commerce / Economics / Management பிரிவை சேர்ந்த பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது CA / CS / CWA / CFA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் SC / ST  பிரிவினர்கள் குறைந்தது 55% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

sidbi

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் வழி எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் கொள்குறி வகை கேள்விகள் மற்றும் விரிவாக விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்கள். 

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 16.4.2022

நேர்முகத்தேர்வு நடைபெறும் மாதம் : மே 2022

விண்ணப்பக் கட்டணம் : SC / ST / PWD பிரிவினர்களுக்கு ரூ.175. இதர பிரிவினருக்கு ரூ.1100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.sidbi.in   என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.3.2022

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு தொடர்பான கூடுதல் விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

sidbi

குறிப்பு : 

1. ஆன்லைன் எழுத்துத்தேர்வானது அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், டெல்லி போன்ற இடங்களில் நடத்தப்படும். எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விபரம் அடங்கிய E-Admit Card மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

2. எழுத்துத்தேர்விற்கு வரும் போது அட்மிட் கார்டு நகல், ஆன்லைன் விண்ணப்பப் படிவ பிரிவுண்ட் மற்றும் வயது, கல்வித்தகுதி தொடர்பான சான்றுகளின் அசல் மற்றும் சுய அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்