கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் வேலைவாய்ப்பு : –
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் (govt jobs in kanniyakumari) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய முழு பின்வருமாறு.
kanyakumari government jobs
1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 4
இனசுழற்சி முறை :
- பொது பிரிவினர் (GT) – 1
- ஆதிதிராவிடர் (அருந்ததியர்) பெண் / ஆதரவற்ற விதவை – 1
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (MBC / DNC) – 1
- பிற்படுத்தப்பட்ட இனத்தவர் (முஸ்லிம் தவிர) BC (Other than Muslims) – 1
ஊதிய விகிதம் : ரூ. 15,700 – 50,000 ( என்ற ஊதிய ஏற்ற முறையில் அரசுநிர்ணயம் செய்யும் படிகளுடன் )
வயதுவரம்பு : 1.7.2022 தேதியின்படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC / DNC பிரிவினருக்கு 2 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்டத் தெந்திருக்க வேண்டும்.
government jobs in kanniyakumari 2022
2. பணியின் பெயர் : ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)
காலியிடங்கள் : 1
இனசுழற்சி முறை :
- பொது பிரிவினர் (GT) – 1
ஊதிய விகிதம் : ரூ. 19,500 – 62,000 ( என்ற ஊதிய ஏற்ற முறையில் அரசுநிர்ணயம் செய்யும் படிகளுடன் )
வயதுவரம்பு : 1.7.2022 தேதியின்படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC / DNC பிரிவினருக்கு 2 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 1988 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரிமிடம் பெறப்பட்ட செல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
how to apply for Kanyakumari government jobs 2022
விண்ணப்பிக்கும் முறை : www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
Kanyakumari government jobs 2022
அனுப்ப வேண்டிய முகவரி :
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
திருவட்டார்,
கன்னியாகுமரி மாவட்டம் – 629 177.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.07.2022 (மாலை 5.45 மணிக்குள்)
Kanyakumari government jobs 2022
குறிப்பு :
- விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி சான்று, முன்னுரிமைச் சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
- இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
- விண்ணப்படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE