மத்திய அரசின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (bel career) அசிஸ்டென்ட் மற்றும் புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
bel career
1. பணியின் பெயர் : Assistant Engineer
காலியிடங்கள் : 11
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000
வயதுவரம்பு : 1.9.2021 தேதியின்படி 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Electrical & Electronics – ல் 3 வருட டிப்ளமோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
bel career
2. பணியின் பெயர் : Project Engineer
காலியிடங்கள் : 15 (UR-6, SC-2, ST-2, OBC-3, EWS-2)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 (முதல் வருடம்); ரூ. 45,000 (2-ம் வருடம்); ரூ. 50,000 (3-ம் வருடம்);
வயதுவரம்பு : 1.8.2021 தேதியின்படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Electrical & Electronics – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல் பாடப்பிரிவில் B.E / B.Tech. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மலையாளம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
bel career
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்விற்கான தேதி மற்றும் இடம் பற்றிய விபரம் மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. இதனை SBI Collect வழியாக செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.bel-india.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பப் படிவம் பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்பவும்.
அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
1. Assistant Engineer பணிக்கு அனுப்ப வேண்டிய முகவரி :
Manager (HR/SC & US),
Bharat Electronics Ltd.,
Jalahalli,
Bangalore – 560 013.
2. Project Engineer பணிக்கு அனுப்ப வேண்டிய முகவரி :
Project Engineer – I for K-FON Project,
Missile Systems SBU,
Bengaluru Unit.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.9.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.