டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் தகுதிக்கு RITES நிறுவனத்தில் வேலை – rites recruitment (2021-22)

hcl careers

RITES நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் (rites recruitment) பணிக்கு டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Engineering (Civil)

காலியிடங்கள் : 40 (UR-16, EWS-3, SC-15, ST-6)

சம்பளவிகிதம்  : ரூ. 22,353 (Graduate Engineer),  ரூ. 18,350 (Diploma Engineer)

வயதுவரம்பு : 1.9.2021 தேதியின் படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : சிவில் பாடப் பிரிவில் B.E / B.Tech. / B.Sc. (Engg.)  தேர்ச்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு குறைந்தது 6 வருட பணி அனுபவமும், டிப்ளமோ படிவத்தவர்களுக்கு 12 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

rites recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு 27.9.2021 தேதியன்று கொச்சிலுள்ள RITES நிறுவன வளாகத்தில் நடைபெறும்.

விண்ணப்பதாரின் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நேர்முகத்தேர்வு அழைப்பு கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

நேர்முக்தேர்வின் போது கல்வித்தகுதி, பணி அனுபவம் உட்பட தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.rites.com   என்ற இணையதளம் மூலம் 19.9.2021 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்