தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள் (daily current affairs quiz) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்…
daily current affairs quiz
1. 2022 – ஆம் ஆண்டு புவி மணிநேரத்தின் கருப்பொருள் என்ன?
- Shape our Future
2. 2022 – சன்சத் ரத்னா விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் APJ அப்துல் கலாம் விருதைப் பெற்றவர்கள் யாவர் ?
- ஹண்டே & வீரப்ப மொய்லி
3. 2022 – SAFF -U-18 மகளிர் சாம்பியன் ஷிப்பை வென்ற நாடு எது ?
- இந்தியா
4. ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் என்பவர் எந்த அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ளார்?
- (NATO) வட அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு
5. “பிரஸ்தான்” என்பது எந்த இந்திய ஆயுதப்படையால் நடத்தப்படும் கடல்சார் பாதுகாப்பு பயிற்சியாகும்?
- இந்திய கடற்படை
6. மண்டலம் முழுவதும் 100% மின்மயமாக்கலை நிறைவு செய்துள்ள இரயில்வே பிரிவு எது ?
- கொங்கன் இரயில்வே
7. கிட்டி வங்கியின் இந்திய வாடிக்கையாளர் வங்கி சார் வணிகங்களை கையகப்படுத்திய வங்கி எது?
- ஆக்சிஸ் வங்கி
8. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையமானது (AAI), உள்நாட்டு விமானப் போக்குவரது மேலாண்மை அமைப்புகளை உருவாக்குவதற்காக எந்நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?
- BEL
9. “துலிப் திருவிழா” என்பது இந்தியாவின் எந்த நகரத்தில் நடத்தப்படும் ஒரு விழாவாகும்?
- ஸ்ரீநகர்
10. 2021 – ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது?
- குஜராத்
daily current affairs quiz
11. சரிஸ்கா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
- ராஜஸ்தான்
12. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற “சஞ்சி கலை” நடைமுறையில் உள்ள மாநிலம் எது?
- உத்திர பிரதேசம்
13. செர்தார் பெர்டிமுகமெடோவ் என்பவர் எந்த நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்?
- துர்க்மெனிஸ்தான்
14. ” 2030 ஆம் ஆண்டை நோக்கி இந்திய வேளாண்மை” என்ற நூலை NITI ஆயோக்கானது எந்த நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டது?
- FAO
15. அரசு மின்-சந்தை (GeM) தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி யார்?
- P.K. சிங்
16. நாட்டில் முதன் முறையாக பால் உற்பத்தியாளர்களுக்காக பிரத்யேக வங்கியை அமைக்கவுள்ள மாநிலம் எது?
- கர்நாடகா
17. முக்ய மந்திரி உத்யம் கிராந்தி யோஜனாவைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
- மத்தியப் பிரதேசம்
18. “Not Just A Nightwatchman : My Innings with BCCI” என்ற நூலின் ஆசிரியர் யார்?
- வினோத் ராய்
19. சமீபத்தில் DRDO அமைப்பு SFDR பூஸ்டர் ஏவுகணை அமைப்பை எங்கு வெற்றிகரமாக சோதிக்கயுள்ளது?
- ஒடிஸா
20. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிருந்து நீக்கப்பட்ட இரண்டாவது நாடு எது?
- ரஷ்யா
daily current affairs quiz
21. “முத்ரா திட்டம்” எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
- 2015
22. “சீமாதர்ஷன்” என்ற எல்லை சுற்றுலா திட்டத்தை எங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துள்ளார்?
- குஜராத்
23. 71 – வது தேசிய கூடைபந்து சாம்பியன் ஷிப் போட்டியில் (ஆடவர் பிரிவு) எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது?
- தமிழ்நாடு
24. “ஒரு நிலையம், ஒரு பொருள்” திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த ரயில் நிலையத்தில் “நெட்டி வேலைப்பாடு விற்பனை அரங்கம்” தொடங்கப்பட்டுள்ளது?
- தஞ்சாவூர்
25. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பினாகா MK -1 ராக்கெட் அமைப்பு எங்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது?
- ராஜஸ்தான்
26. 2022 – ஆம் ஆண்டு 5 -வது BIMSTEC உச்சி மாநாட்டை நடத்தும் நாடு எது?
- இலங்கை
27. அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற ஷாஹி லிச்சி சார்ந்த இந்திய மாநிலம் எது?
- பீகார்
28. பெண்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதற்காக “DSLSA” சட்ட உதவியகத்தைத் தொடங்கிய அமைப்பு எது?
- தேசிய பெண்கள் ஆணையம்
29. எஃகு கழிவுகளால் ஆன முதல் சாலையைப் பெற்றுள்ள இந்திய நகரம் எது?
- சூரத்
30. சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் கேமராக்களால் சூழப்பட்டிருக்கும் இந்திய நகரம் எது?
- கோழிக்கோடு
daily current affairs quiz
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE