தமிழ்நாடு மீன்வளத் துறையில் Data Manager வேலை : –
தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை மற்றும் மீனவர் நலப்பிரிவில் (fisheries recruitment) Data Cum MIS Manager பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய முழு விபரம் வருமாறு.
fisheries recruitment
பணியின் பெயர் : State Data Cum MIS Manager
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 50,000
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Statistics / Mathematics / Fisheries Economics இதில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Information Technology (IT) / Computer Applications – ல் டிப்ளமோ படிப்பை தேர்ச்சி பெற்று குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.fisheries.tn.gov.in எனற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Commissioner of Fisheries and Fishermen Welfare,
3rd Floor, Integrated Office Building for Animal Husbandry and Fisheries Department,
No.571, Anna Salai,
Nandanam,
Chennai – 600 035.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.1.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
fisheries recruitment
2. மத்திய நீர்வளத் துறை அலுவலகத்தில் டிரைவர் வேலை : –
மத்திய நீர்வளத்துறையில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிலத்தடி நீர் வாரிய அலுவலகத்தில் காலியாக உள்ள டிரைவர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரங்கள் வருமாறு.
பணியின் பெயர் : Staff Car Driver (Ordinary Grade)
காலியிடங்கள் : 24 (UR-15, OBC-5, SC-3, ST-1)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200
வயதுவரம்பு : 18 -லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது ஹிந்தி வாசிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். வாகனத்தில் ஏற்படும் சிறிய பழுதுகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.cgwb.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்கள் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Regional Director,
CGWD, SWR, Bhujal Bhawan,
27th Main, 7th Cross,
HSR Layout Sector – 1,
Bengaluru – 560 102.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.1.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT