தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள் (gk today current affairs) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்…..
gk today current affairs
1. 2022 இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்ற இடம் எது ?
– புதுடெல்லி
2. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற “சக்ஷம்” என்பது எந்த ஆயுதப்படையின் கடற்புற ரோந்துக் கப்பலாகும் ?
– இந்திய கடலோரக் காவல் படை
3. “உலக கவிதை நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது ?
– மார்ச் 21
4. 2022-M3M ஹீரூன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலில், முதல் 10 -ல் இடம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
– முகேஷ் அம்பானி
5. 2022 ஆண்டு FIFA உலகக்கோப்பையை நடத்தும் நாடு எது ?
– கத்தார்.
6. தேசிய சுற்றுலா நாள் ஆண்டு தோறும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது ?
– ஜனவரி 25.
7. ஏர் இந்தியாவின் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார் ?
– சந்திரசேகரன்.
8. 2022 ஆண்டு ஜெர்மன் ஓபன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார் ?
– லக்ஷ்யா சென்.
9. 2022 ஆண்டு ISSF உலகக்கோப்பை பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது ?
– இந்தியா.
10. “சர்வதேச துணிச்சல் மிக்க பெண்மணி விருது – 2022 ” – ஐ வென்றவர் யார் ?
– பூமிகா ஸ்ரேஸ்தா, நேபாளம்.
gk today current affairs
11. “MV ராம்பிரசாத் பிஸ்மில்” என்பது அண்மையில் எந்த ஆற்றில் பயணித்த மிக நீளமான கப்பலாகும் ?
– பிரம்மபுத்திரா
12. ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய பொதுச்செயலாளர் யார் ?
– அன்டோனியோ குட்டரஸ்.
13. தற்போதைய மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் யார் ?
– ஜோதிராதித்ய சிந்தியா.
14. தமிழ்நாடு சட்டசபையின் முதல் பெண் துபாசியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
– ராஜலெட்சுமி.
15. தற்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் யார் ?
– மன்சுக் மாண்டவ்யா
16. “சர்வதேசக் காடுகள் தினம்” எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது ?
– மார்ச் 21
17. ஆயுஷ்மான் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
– 2018
18. இஸ்ரேலில் நடைபெற்ற மாரத்தான் போட்டியின் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ள வாலன்டினா வெரட்ஸ்கா எந்த நாட்டை சேர்ந்தவர் ?
– உக்ரைன்.
19. “வேல்டு பிரஸ் போட்டோ” அறக்கட்டளையின் சர்வதேச விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக புகைப்பட கலைஞர் யார் ?
– செந்தில் குமார்
20. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதித்துறை உறுப்பினராக யாரை, மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் நியமித்துள்ளது ?
– புஷ்பா சத்ய நாராயணா
gk today current affairs
21. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எத்தனை புதிய கூடுதல் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார் ?
– 2
22. நாட்டின் முதன் முறையாக 4 சக்கர வாகனங்களின் டயர்களில் பஞ்சர் பாதுகாப்பு தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது ?
– JK Tyre & Industries Ltd.
23. “ஆர்டெமிஸ் – 1” என்பது எந்த விண்வெளி முகமையின் முதன்மைத் திட்டமாகும் ?
– NASA
24. பிப்லோபி பாரத் காட்சியகம், சமீபத்தில் எந்த நகரத்தில் திறக்கப்பட்டது ?
– கொல்கத்தா
25. பயனுள்ள பன்முகத்தன்மைக்கான ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார் ?
-ஐெயதி கோஷ்
26. ஆக்சிஸ் வங்கியின் உதவியுடன் டிஜிட்டல் பள்ளி நலவாழ்வு தளம் தொடங்கப்பட்ட மாநிலம் / யூனியன் பிரதேசம் எது ?
-புதுச்சேரி
27. அழிந்துவரும் “பொன்னிற மந்தி” இனத்தின் பூர்வீக நாடுகள் எவை ?
-இந்தியா மற்றும் பூடான்
28. உலகிலேயே முதன் முறையாக கார்பன் கட்டண வீதத்தை முன்மொழித்த உலகளாவிய சங்கம் எது ?
-ஜரோப்பிய ஒன்றியம்
29. “SKOCH” மாநில நிர்வாக தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது ?
-ஆந்திரப் பிரதேசம்
30. ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் எங்கு உள்ளது ?
-ஸ்ரீநகர் (காஷ்மீர்)
gk today current affairs
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE