பொதுத்துறை வங்கிகளில் (ibps recruitment) காலியாக உள்ள Clerk பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் IBPS தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : IBPS CRP CLERKS EXAM – XI 2022-23
காலியிடங்கள் : 7855
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் காலியிடம் ஏற்பட்டு உள்ள மாநிலத்தின் அலுவலக மொழியில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
ibps recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : IBPS அமைப்பால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள் போன்றவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
எழுத்துத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
முதல் கட்ட எழுத்துத்தேர்வு தொடங்கும் தேர்வு தேதி : டிசம்பர் – 2021
மெயின் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி / பிப்ரவரி 2022
தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
ibps recruitment
விண்ணப்பக் கட்டணம் : SC / ST / PWD பிரிவினர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்கள் ரூ. 175 மட்டும். இதர பிரிவினர்கள் ரூ. 850. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் முறையில் 27.10.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
முக்கிய தேதிகள் விபரம் மற்றும் IBPS தேர்வின் மூலம் பணி நியமனம் வழங்கும் வங்கிகள் விபரம் இணையதளத்தில் பார்க்கவும்.