SBI வங்கியில் Manager / Executive / Probationary Officers பணிகள் – 2021-22

SBI வங்கியில் மேனேஜர், எக்சிகியூட்டிவ் மற்றும் புரபேஷனரி ஆபீசர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட (sbi careers) உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

MANAGER POST :-

Advt.No.:CRPD/SCO/2021-22/15

1. பணியின் பெயர் : Manager (Marketing)

காலியிடங்கள் : 12 (UR-7, SC-1, EWS-1, OBC-3)

சம்பளவிகிதம் : ரூ. 63,840 – 78,230

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Deputy Manager (Marketing)

காலியிடங்கள் : 26 (UR-13, SC-4, ST-1, EWS-2, OBC-6)

சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

பணி எண் 1 மற்றும் 2 -க்கான கல்வித்தகுதி : Marketing / Finance – ல் முழு நேர MBA / PGDBM – ல் தேர்ச்சியுடன் மேனேஜர் பணிக்கு 5 வருட பணி அனுபவமும், Deputy Manager பணிக்கு 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

sbi careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 15.11.2021.

எழுத்துத்தேர்விற்கான அழைப்பு கடித்தை 3.11.2021 தேதியிலிருந்து இணையதளத்தில் பதிவேறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் : பொது / OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ. 750. – ஐ கட்டணமாக ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :   https://bank.sbi/web/careers   or  https://sbi.co.in/web/careers  என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்து விட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 18.10.2021.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

EXECUTIVE OFFICERS POST :-

Advt.No.:CRPD/SCO/2021-22/16

1. பணியின் பெயர் : Executive (Document Preservation Archives)

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 8 – 12 Lacs (Per Annum)

வயதுவரம்பு : 1.10.2021 தேதியின்படி  30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : History அல்லது Anthropology, Economics, Political Sciences Sociology / Linguistics அல்லது Applied / Physical Science – ல் மேற்கண்ட ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

sbi careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 750. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  https://bank.sbi/careers  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தேவையான அனைத்து விபரங்களையும் ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.10. 2021

 

PROBATIONARY OFFICERS POST :-

Advt.No.:CRPD/PD/2021-22/18

1. பணியின் பெயர் : Probationary Officers

காலியிடங்கள் : 2056 (UR-810, OBC-560, SC-324, ST-162, EWS-200)

சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 49,910

வயதுவரம்பு : 1.4.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD / EX – SM பிரிவினருக்கு அரசு விதிமுறையின்படி  சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

sbi careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, Group Exercises மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துத்தேர்வானது Preliminary Exam மற்றும் Main Exam  என இரு கட்டங்களாக நடைபெறும் ஆன்லைன் எழுத்துத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கு 1/4 மதிப்பெண்கள் குறைப்படும்.

Preliminary & Main Exam தேர்விற்கான பாடத்திட்டம், நேரம் மற்றும் மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

Preliminary எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள் : Chennai, Coimbatore, Dindigul, Kanchipuram, Krishnagiri, Madurai, Nagercoil, Namakkal, Perambalur, Salem, Thanjavur, Thiruchirapalli, Tirunelveli, Thoothukodi, Vellore, Virudhunagar.

மெயின் எழுத்துதேர்வு நடைப்பெறும் இடங்கள் : Chennai, Madurai, Tirunelveli

ஆன்லைன் எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ளும் SC / ST / மத சிறுபான்மையினர் பிரிவினர்களுக்கு இலவச Pre – Examination Training (PET) வழங்கப்படும். இதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது குறிப்பிடவும்.

PET பயிற்சி நடைபெறும் இடங்கள் : Chennai, Coimbatore, Madurai.

ஆன்லைன் எழுத்துத்தேர்விற்கான Admit Card – ஐ இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 750. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC / ST / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

sbi careers

விண்ணப்பிக்கும் முறை :   www.sbi.co.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.10.2021

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட முக்கிய தேதிகளின் விபரம் பெற இணையதளத்தை பார்க்கவும்.

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.