air india career

இந்திய (indian air force) விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு ஏர்மேன் பணி

இந்திய (indian air force) விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு ஏர்மேன் பணி – 2021

இந்திய விமானப்படையில் (indian air force) ஏர்மேன் பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான திருமணமாகாத விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Indian air force Recruitment 2021

பணியின் பெயர் : Airmen ( Sportsmen )

காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள விளையாட்டு பிரிவுகள் : 

  1. Athletics
  2. Basketball
  3. Boxing
  4. Cricket
  5. Diving
  6. Football
  7. Handball
  8. Hockey
  9. Kabaddi
  10. Swimming
  11. Volleyball
  12. Water Polo
  13. Squash

(indian air force)

சம்பளவிகிதம் : ரூ.14,600 – 26,900

வயதுவரம்பு : 18.7.2000 – க்கும் 30.6.2004 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய / பல்கலைக்கழக / பள்ளிகள் அளவிலான போட்டிகளில் ஜீனியர் / சீனியர் பிரிவில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

(indian air force)

உடற்தகுதிகள் :  உயரம் : 152.5 செ.மீ  உயரத்திற்கேற்ப எடையை பெற்றிருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு : 1.6 கி.மீ தூரத்தை 6.30 நிமிடத்திற்குள் ஒடிக்கடக்க வேண்டும். மேலும் Push ups – 10 ( 1 Minute ) , Sit Ups – 10 ( 1 Minute ) , Squats – 20 ( 1 Minute ) எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விளையாட்டு தகுதி, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின் போது விண்ணப்பப் படிவம், 4 புகைப்படங்கள், கல்வித்தகுதி சான்றுகள், விளையாட்டு சாதனை சான்றுகள், நன்னடத்தை சான்று போன்றவற்றின் அசல்களையும் அவைகளின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க  வேண்டும்.

How to Apply for indian air force post 2021

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் விண்ணப்பப் படிவத்தை ஏ4 அளவு தாளில் தயார் செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் மேலும் இரண்டு கலர் புகைப்படங்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களிலும் கையொப்பம் மற்றும் இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்து அதனை PDF Format -ல்  கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி : iafsportsrec@gmail.com

குறிப்பு : விண்ணப்பதாரரின் புகைப்படத்தின் முன்பக்கம் விண்ணப்பதாரரின் பெயர், பிறந்ததேதி, புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி போன்ற விபரங்கள் கருப்பு சிலேட்டில் எழுதப்பட்டு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் தகவல்களை காண  AIF இணையதளத்தின் மூலம் அறியலாம்.

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.4.2021

ஆட்சேர்ப்பு நடைப்பெறும் இடம் : 

New Willingdon camp,

Air Force Station New Delhi,

Lok Kalyan Marg,

New Delhi – 110 003.

ஆட்சேர்ப்பு நடைப்பெறும் நாட்கள் : 26.4.2021 முதல் 28.4.2021

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்