இந்திய கடற்படையில் Sailor / SSR பணிகள் – join indian navy 2021
இந்திய கடற்படையில் (join indian navy) Artificer Apprentice (AA) மற்றும் Senior Secondary Recruits (SSR) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1.பணியின் பெயர் : Sailors for Artificer Apprentice (AA) – Aug.2021 Batch
காலியிடங்கள் : 500
join indian navy
2. பணியின் பெயர் : Senior Secondary Recruits (SSR) – Aug.2021 Batch
காலியிடங்கள் : 2000
வயதுவரம்பு : 1.2.2021 – லிருந்து 31.7.2004 – க்கும் இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
உதவித்தொகை : ரூ. 14,600
சம்பளவிகிதம் : ரூ.21,700 – 69,100
கல்வித்தகுதி : +2 – வில் கணிதம், இயற்பியல், வேதியியல், கணிணி அறிவியல், பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்விற்கான வினாக்கள் கொள்குறி வகையை (Objective type ) கொண்டிருக்கும். வினாக்கள் 4 பிரிவுகளாக ஆங்கிலம், அறிவியல், கணிதம், மற்றும் பொது அறிவு வினாக்களைக் கொண்டிருக்கும்.
How to Apply for join indian navy
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 60. + GST கட்டணமாக செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முன் உங்கள் விபரங்கள், மின்னஞ்சல் முகவரி, மொபைல் நம்பர் போன்றவற்றை பதிவு செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.