சென்னையிலுள்ள தேசிய எலக்ட்ரானிக்ஸ் & தகவல் தொழிற்நுட்ப மையத்தில் (NIELIT) கீழ்க்கண்ட பணிகளுக்கு (nielit recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
nielit recruitment
1. பணியின் பெயர் : DevOps Engineer
காலியிடங்கள் : 1
2. பணியின் பெயர் : System / Application Developer
காலியிடங்கள் : 1
3. பணியின் பெயர் : System / Network & Backup Administrator
காலியிடங்கள் : 1
மேற்கண்ட பணி எண் 1,2 & 3 -க்கான சம்பளவிகிதம் மற்றும் கல்வித்தகுதி வருமாறு.
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 45,000
கல்வித்தகுதி : Computer Science / IT / Electronics / EEE பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது M.Sc எலக்ட்ரானிக்ஸ் / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது B.Sc எலக்ட்ரானிக்ஸ் / BCA படிப்புடன் Cloud Computing பாடத்தில் PG Diploma முடித்திருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Resource Person (Accounts)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 24,000 – 30,000
கல்வித்தகுதி : B.Com / M.Com / MBA (Finance) போன்ற ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 முதல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
nielit recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : வீடியோ கான்பரனிசிங் முறையில் நடைபெறும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி, நேரம் போன்ற விபரங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் 17.2.2022 அன்று அனுப்பி வைக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஒரு வருடம் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 18.2.2022
விண்ணப்பிக் கட்டணம் : ரூ. 200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.nielitchennai.edu.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் தங்களுடைய கல்வித்தகுதி, பணி அனுபவம், வயது சான்றுகளின் சுயஅட்டெஸ்ட் நகல்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து அனுப்பவும். மேற்கண்ட வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து விபரங்களும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எனவே மிகச்சரியான மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பித்தில் குறிப்பிடவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.2.2022.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT