hcl careers

தேசிய திறந்தவெளி பள்ளியில் +2 / தட்டச்சு படித்தவர்களுக்கு வேலை -nios recruitment 2021-22

நொய்டாவிலுள்ள தேசிய திறந்தவெளி பள்ளியில் (nios recruitment) கீழ்வரும் 79 காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:NIOS/RC/01/2021

1. பணியின் பெயர் : Assistant

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

வயதுவரம்பு : 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் கீ போர்டில் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டரில் பணி புரிய தெரிந்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Stenographer

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

வயதுவரம்பு : 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Secretarital Practice படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் வேகம்,  ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

nios recruitment

3. பணியின் பெயர் : Junior Assistant

காலியிடங்கள் : 36

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் கீ போர்டில் ஒரு மணி நேரத்தில் 6000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

4. பணியின் பெயர் : EDP Supervisor

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400

வயதுவரம்பு : 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப் படிப்புடன் PGDCA படித்திருக்க வேண்டும். மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :    www.nios.ac.in  என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்கள் நகல்களுடன் 10.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க வேண்டிய கூடுதல் விபரம் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்