மத்திய அரசு ஆசிரியர் பணிக்கான CTET தேர்வு-ctet exam 2021-22

cutn careers

CBSE – பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசு பள்ளிகளில் 1- ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் ஆசிரியராக பணி புரிய CBSE – ஆல் நடத்தப்படும் CTET தேர்வில் (ctet exam) தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டிற்கான CTET தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு.

ctet exam

1. தேர்வின் பெயர் : Central Teacher Eligibility Test (CTET – 2021)

கல்வித்தகுதி :   

1. CTET – PAPER – I தேர்வு எழுதி 1 – ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் +2 தேர்ச்சியுடன் இரண்டு வருட ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். (Diploma in Elementary Education).

2. CTET – PAPER – II தேர்வு எழுதி 6 ஆம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணி புரிய ஆங்கிலம் / கணிதம் / அறிவியல் / சமூக அறிவியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பை முடித்து B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ctet exam

குறிப்பு : 

1. குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேவையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

2. ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியை NCTE – ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுனத்தில் பெற்றிருக்க வேண்டும். 

CTET தேர்வு பற்றிய விபரம் :  இத்தேர்வு மத்திய அரசால் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, நாகர்கோவில், திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய இடங்களில் மற்றும் புதுச்சேரியிலும் நடைபெறும்.

தேர்வு மைய முகவரி மற்றும் இதர விரபங்கள் தேர்வுக்கான Admit Card  மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். Admit Card – ஐ இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளவும். PAPER – I மற்றும் PAPER – II தேர்வில் இடம் பெறும் பாடங்கள் கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் கேட்கப்படும். மொழிதாளில் ஆங்கிலம் / இந்தி / தமிழ் ஆகியவற்றில் ஏதாவது இரண்டை மட்டும் தேர்வு செய்யவும்.

ctet exam

விண்ணப்பக் கட்டணம் :  ஏதாவது ஒரு தேர்வு மட்டும் எழுத விரும்பினால் General / OBC பிரிவினர்கள் ரூ. 1000 / -ம் SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 500 / -ம் . கட்டணமாக செலுத்தி வேண்டும்.  2 தாள்களையும் (PAPER – I, II) எழுத விரும்பினால் General OBC பிரிவினர்கள் ரூ. 1,200 -ம் SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 600 – ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.ctet.nic.in  என்ற இணையதளம் மூலம் 19.10.2021 தேதிக்கு முன்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். எழுத்துத்தேர்வுக்கான முழுமையான பாடத்திட்டம் மாதிரி வினாவிடைகள் போன்ற விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  CTET -ல் தேர்வு முடியும் வரை தொடர்ந்து இணையதளத்தை கவனித்து வரவும்.

தேர்வு நடைபெறும் நாள் : 16.12.2021 முதல் 13.1.2022 வரை.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்