RBI – ல் பட்டதாரிகளுக்கு அதிகாரிப் பணிகள் – rbi career 2022

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Grade – “B” Officer பணிகளுக்கு (rbi career) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

rbi career

1. பணியின் பெயர் : Officers (General)

காலியிடங்கள் : 238 (UR-109, SC-32, ST-15, OBC-59, EWS-23)

சம்பளவிகிதம் : ரூ. 55,200 – 99,750

வயதுவரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்தது 60% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு இளநிலை பட்டப்டிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Officers (DEPR)

காலியிடங்கள் : 31 (UR-11, SC-4, ST-5, OBC-8, EWS-3)

சம்பளவிகிதம் : ரூ. 55,200 – 99,750

வயதுவரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பொருளாதாரத்தை முக்கிய பாடமாக கொண்டு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Assistant Manager (Rajbhasha)

காலியிடங்கள் : 6 (UR-3, SC-2, ST-1)

சம்பளவிகிதம் : ரூ. 55,200 – 99,750

வயதுவரம்பு : 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பில் சான்றிதழ் படிப்பு மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

rbi career

4. பணியின் பெயர் : Assistant Manager (Protocol & Security)

காலியிடங்கள் : 3 (UR-1, SC-2)

சம்பளவிகிதம் : ரூ. 55,200 – 99,750

வயதுவரம்பு : 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : முப்படைகள் ஏதாவதொன்றில் குறைந்தது 5 வருடங்கள் இராணுவ அதிகாரியாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Officer (DSIM)

காலியிடங்கள் : 25 (UR-7, SC-7, ST-5, OBC-4, EWS-2)

சம்பளவிகிதம் : ரூ. 55,200 – 99,750

வயதுவரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Statistics / Mathematical Economics / Quantitative Finance பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

rbi career

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துதேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, ஈரோடு, விருதுநகர்.

முதல் கட்ட எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி :

1. Officer (General) பணிக்கு – 28 May 2022

2. Officer (DEPR / DSIM) பணிகளுக்கு – 2 July 2022

3. Assistant Manager (Rajbhasha / Protocol & Security) பணிகளுக்கு – 21 May 2022

விண்ணப்பக் கட்டணம் : SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.100. இதர பிரிவினருக்கு ரூ.850. [Assistant Manager (Rajbhasha/Protocol & Security) பணிகளுக்கு ரூ.600] கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.rbi.org.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்