SBI வங்கியில் மேனேஜர், எக்சிகியூட்டிவ் மற்றும் புரபேஷனரி ஆபீசர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட (sbi careers) உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
MANAGER POST :-
Advt.No.:CRPD/SCO/2021-22/15
1. பணியின் பெயர் : Manager (Marketing)
காலியிடங்கள் : 12 (UR-7, SC-1, EWS-1, OBC-3)
சம்பளவிகிதம் : ரூ. 63,840 – 78,230
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Deputy Manager (Marketing)
காலியிடங்கள் : 26 (UR-13, SC-4, ST-1, EWS-2, OBC-6)
சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
பணி எண் 1 மற்றும் 2 -க்கான கல்வித்தகுதி : Marketing / Finance – ல் முழு நேர MBA / PGDBM – ல் தேர்ச்சியுடன் மேனேஜர் பணிக்கு 5 வருட பணி அனுபவமும், Deputy Manager பணிக்கு 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
sbi careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 15.11.2021.
எழுத்துத்தேர்விற்கான அழைப்பு கடித்தை 3.11.2021 தேதியிலிருந்து இணையதளத்தில் பதிவேறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் : பொது / OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ. 750. – ஐ கட்டணமாக ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : https://bank.sbi/web/careers or https://sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்து விட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 18.10.2021.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
EXECUTIVE OFFICERS POST :-
Advt.No.:CRPD/SCO/2021-22/16
1. பணியின் பெயர் : Executive (Document Preservation Archives)
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 8 – 12 Lacs (Per Annum)
வயதுவரம்பு : 1.10.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : History அல்லது Anthropology, Economics, Political Sciences Sociology / Linguistics அல்லது Applied / Physical Science – ல் மேற்கண்ட ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
sbi careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 750. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : https://bank.sbi/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தேவையான அனைத்து விபரங்களையும் ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.10. 2021
PROBATIONARY OFFICERS POST :-
Advt.No.:CRPD/PD/2021-22/18
1. பணியின் பெயர் : Probationary Officers
காலியிடங்கள் : 2056 (UR-810, OBC-560, SC-324, ST-162, EWS-200)
சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 49,910
வயதுவரம்பு : 1.4.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD / EX – SM பிரிவினருக்கு அரசு விதிமுறையின்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
sbi careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, Group Exercises மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துத்தேர்வானது Preliminary Exam மற்றும் Main Exam என இரு கட்டங்களாக நடைபெறும் ஆன்லைன் எழுத்துத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கு 1/4 மதிப்பெண்கள் குறைப்படும்.
Preliminary & Main Exam தேர்விற்கான பாடத்திட்டம், நேரம் மற்றும் மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
Preliminary எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள் : Chennai, Coimbatore, Dindigul, Kanchipuram, Krishnagiri, Madurai, Nagercoil, Namakkal, Perambalur, Salem, Thanjavur, Thiruchirapalli, Tirunelveli, Thoothukodi, Vellore, Virudhunagar.
மெயின் எழுத்துதேர்வு நடைப்பெறும் இடங்கள் : Chennai, Madurai, Tirunelveli
ஆன்லைன் எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ளும் SC / ST / மத சிறுபான்மையினர் பிரிவினர்களுக்கு இலவச Pre – Examination Training (PET) வழங்கப்படும். இதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது குறிப்பிடவும்.
PET பயிற்சி நடைபெறும் இடங்கள் : Chennai, Coimbatore, Madurai.
ஆன்லைன் எழுத்துத்தேர்விற்கான Admit Card – ஐ இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 750. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC / ST / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
sbi careers
விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.10.2021
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட முக்கிய தேதிகளின் விபரம் பெற இணையதளத்தை பார்க்கவும்.
.