மத்திய அரசு பணியாளர் தேர்வணையமான Staff Selection Commission (SSC) -ஆல் நடத்தப்படும் போட்டித் தேர்விற்கு (ssc recruitment 2022) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் வருமாறு.
ssc recruitment 2022
1. தேர்வின் பெயர் : SSC – Combined Higher Secondary Level (10 +2 ) Exam – 2021
பணியின் பெயர் :
1. Lower Division Clerk (LDC)
2. Junior Secretary Assistant (JSA)
3. Postal Assistant (PA)
4. Sorting Assistant (SA)
5. Data Entry Operator (DEO)
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
மேலும் SC / ST பிரிவைச் சேர்ந்த விதவைகளுக்கு 40 வயது வரையிலும், இதரப் பிரிவைச் சேர்ந்த விதவைகளுக்கு 35 வயது வரையிலும் சலுகை அளிக்கப்படும். இராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும் திறன் பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசின் C & AG துறையில் Data Entry Operator பணியின் சேர கணிதப் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ssc recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : SSC – ஆல் நடத்தப்படும் மூன்று கட்டத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். முதல் கட்டத் தேர்வில் கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டாவது கட்டத் தேர்வில் விரிவாக விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். மூன்றாம் கட்டத் தேர்வில் விண்ணப்பதாரின் தட்டச்சு திறன் பரிசோதிக்கப்படும். முதல் கட்டத்தேர்வுக்கான பாடப்பிரிவுகள்,, மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தட்டச்சு தேர்வில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். C & AG துறையில் DEO பணியில் சேர ஒரு மணி நேரத்தில் 15,000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்யலாம்.
மேற்கண்ட மூன்று கட்ட தேர்விலும் வெற்றி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவர்.
ssc recruitment 2022
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள் / SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.3.2022
தேர்வு நடைபெறும் தேதி :
முதல் கட்டத் தேர்வு : May 2022
இரண்டாம் கட்டத் தேர்வு : பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT