மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து (tn govt jobs) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய முழு விபரங்கள் வருமாறு.
tn govt jobs
பணியின் பெயர் : கிராம உதவியாளர்
காலியிடங்கள் : 16 (GT-6, MBC & DNC-3. BC-4, SC-2, SC(A)-1)
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 37 வயதிற்குள்ளும், இதரப் பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 5 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
tn govt jobs
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தகுதி பெறுவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விரும்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரம் அடங்கிய பயோடேட்டாவுடன் கல்வித்தகுதி சான்றுகள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மற்றும் வேலைவாய்ப்பு பதிவு விபரம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய முகவரி எழுதப்பட்ட ரூ.25 -க்கான தபால் தலை ஒட்டப்பட்ட கவருடன் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 31.12.2021 -க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு : விண்ணப்பதாரர்கள் தரங்கம்பாடி வட்டத்தினைச் சேர்ந்தவர்களாகவும், தரங்கம்பாடி வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
tn govt jobs
2. சாப்ட்வேர் பூங்காவில் இன்ஜினியர் பணிகள் : –
மத்திய அரசுக்கு சொந்தமான Software Technology Park – ல் Member Technical Staff பணிக்கு தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Member Technical Staff
காலியிடங்கள் : 11 (GT-4, OBC-3, SC-3, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics / Electrical / Computer Science / Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதல் வகுப்பு B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது M.Sc எலக்ட்ரானிக்ஸ் / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. கட்டணத்தை DD – யாக எடுத்து அனுப்பவும்.
DD எடுக்க வேண்டிய முகவரி :
Software Technology Parks of India,
New Delhi.
விண்ணப்பிக்கும் முறை : www.stpi.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 30.1.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். தகுதியானவர்கள் நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படுவர் இது பற்றிய விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும். மின் அஞ்சல் முகவரிக்கு மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT