TNPSC – Group II – IV தேர்விற்கான மாதிரி வினா-விடைகள் : பயிற்சி – 3 tnpsc model questions papers
பொதுத்தமிழ் பாடப்பிரிவு: –
TNPSC Group II – IV தேர்விற்கான (tnpsc model question paper) தற்போதைய புதிய பாடத்திட்டத்தின் படி முக்கிய வினா – விடைகள் பயிற்சி தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
tnpsc model questions papers
1. திருமாலடியார்கள் அல்லது திருமாலின் கல்யாண குணங்களில் ஆழ்ந்து கிடப்பவர்
a) தீட்சிதர்கள்
b) நாயன்மார்கள்
C) ஆழ்வார்கள்
d) ஆச்சாரியா்கள்
2. அம்புலிப் பருவத்தில் சாம, தான, பேத, தண்டம் என்ற முறையில் பாடியவர்
a) பொியாழ்வார்
b) பேயாழ்வார்
C) நம்மாழ்வார்
d) பூதத்தாழ்வார்
3. புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல்
a) நன்னூல்
b) பெருங்கதை
C) இளையனார் களவியலுரை
d) புறப்பொருள் வெண்பாமாலை
4. களவழி நாற்பது என்பது
a) அகநூல்
b) புறநூல்
C) அறநூல்
d) அகமும் புறமும் கலந்த நூல்
5. திரிகடுகம் என்னும் நூலை இயற்றியவர்
a) கபிலர்
b) ஔவையார்
C) பட்டினத்தார்
d) நல்லாதனார்
6. வரைவு கடாதல் என்றால்
a) வேலவற்குப் பூஜையிடல்
b) துன்பம் கலவாத இன்பம்
C) மணம் புரிந்துக் கொள்ளும் படி வேண்டுதல்
d) தலைவனுடன் தலைவி பாலைநிலம் வழியாகப் புறப்பட்டு போதல்
7. இடைச்சங்கம் இருந்த இடம் எது
a) பூம்புகார்
b) கொற்றல்
C) வடமதுரை
d) கபாடபுரம்
8. பின்வரும் பட்டியல் I -ஐ பட்டியல் – II உடன் பொருத்துக.
நூல் நூலாசிரியர்
A . சிலப்பதிகாரம் 1. திருத்தக்கதேவர்
B. மணிமேகலை 2. நாதகுத்தனார்
C. சீவகசிந்தாமணி 3. இளங்கோவடிகள்
D. குண்டலகேசி 4. சீத்தலைச் சாத்தனார்
குறியீடுகள் :
A B C D
a) 3 4 1 2
b) 3 4 2 1
C) 2 3 1 4
d) 2 4 1 3
9. கலித்தொகைப் பாடல்கள் பின்வரும் எந்தப் பாவினால் அமைந்தது ?
a) கலிப்பா
b) வஞ்சிப்பா
C) ஆசிரியப்பா
d) நேரிசை ஆசிரியப்பா
10. புறநானூற்றுப் பாடலில் போரின் நெறியைப் பற்றிக் கூறுபவர்
a) ஔவையார்
b) ஆதிமந்தியார்
C) காக்கை பாடினியார்
d) பொன்முடியார்
tnpsc model questions papers
11. பின்குறிப்பிடப்படுபவர்களுள் சீவகன் மணம் செய்து கொள்ளாத பெண் யார் ?
a) விமலை
b) கோவிந்தை
C) கேமசரி
d) கனகமாலை
12. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றைக் காண்.
1. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர் தமிழ் மன்னராவர்
2. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர் பாண்டியராவர்
3. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர் பழந்தமிழ் வேந்தராவர்
4. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர் மதுரைப் பாண்டியராவர்
a) 4 மட்டும் சரி
b) 2 மற்றும் 4 சரி
C) 1 மற்றும் 3 சரி
d) இவை அனைத்தும் சரி
13. திருக்குறளும், நாலடியாரும் இணைத்தே பேசப்படக் காரணம் : இவை இரண்டும்.
1. நீதி நூல்கள்
2. இரண்டிலும் பால் வைப்பு முறை ஒன்றே
3. தொகுப்பு நூல்கள்
4. சங்கம் மருவிய கால நூல்கள்
a) 1 மற்றும் 2 ஏற்புடையன
b) 2 மற்றும் 3 பொருத்தமானவை
C) 1 மற்றும் 4 ஏற்புடையன
d) 1, 2, 4 ஏற்புடையன
14. சரியான விடையைத் தேர்வு செய்க.
a) முதற்சங்கத்தில் இருந்த புலவர் 1700 பேர் என்பர்
b) இரண்டாம் சங்கத்தில் இருந்த புலவர் 3700 பேர் என்பர்
C) நான்காம் சங்கத்தில் இருந்த புலவர் 700 பேர் என்பர்
d) மூன்றாம் சங்கத்தில் இருந்த புலவர் 200 பேர் என்பர்
15. குமரகுருபர் பாடிய கலம்பகம் எது ?
a) திருவாரூர் கலம்பகம்
b) தில்லைக் கலம்பகம்
C) திருவெங்கை கலம்பகம்
d) மதுரைக் கலம்பகம்
tnpsc model questions papers
விடைகள் : –
1. C) ஆழ்வார்கள்
2. a) பொியாழ்வார்
3. d) புறப்பொருள் வெண்பாமாலை
4. b) புறநூல்
5. d) நல்லாதனார்
6. C) மணம் புரிந்துக் கொள்ளும் படி வேண்டுதல்
7. d) கபாடபுரம்
8. a) 3 4 1 2
9. a) கலிப்பா
10. a) ஔவையார்
11. b) கோவிந்தை
12. b) 2 மற்றும் 4 சரி
13. a) 1 மற்றும் 2 ஏற்புடையன
14. b) இரண்டாம் சங்கத்தில் இருந்த புலவர் 3700 பேர் என்பர்
15. d) மதுரைக் கலம்பகம்
TNPSC மாதிரி வினா- விடை பயிற்சி – 2
TNPSC மாதிரி வினா – விடை பயிற்சி – 4
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT