பொதுத்தமிழ் : –
தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) – ல் காலியாக உள்ள Group – II / IIA மற்றும் Group – IV பணிகளுக்கு (tnpsc portal) சிறந்த முறையில் மாதிரி வினா – விடைகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்.
tnpsc portal
1. ” புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்று பாடியவர் யார்?
a) பாரதிதாசன்
b) பாரதியார்
c) நாமக்கல் கவிஞர்
d) திரு.வி.கலியாண சுந்தரனார்
2. நாலடியார் பற்றிய தகவல்களில் எது சரியானது ?
a) பதுமனார் என்ற புலவர் ஒருவர் திருக்குறளைப் பின்பற்றி இந்நூலை பாகுபாடு செய்தாா்.
b) இந்நூலுக்கு அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பகுதிகளும் உள்ளன.
c) இந்நூல் உட்பிரிவு இன்றி படலமாக காணப்படும்.
d) மேற்கண்ட அனைத்தும்.
3. கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் காண்க?
i) வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் என மூதுரையின் கடவுள் வாழ்த்து தொடங்குகிறது.
ii) வாக்குண்டாம் எனத் தொடங்குவதால் மூதுரை வாக்குண்டாம் எனப் பெயர் பெற்றது.
a) i மற்றும் ii தவறு
b) i மட்டும் தவறு
c) ii மட்டும் தவறு
d) இரண்டும் சரி
4. கணிமேதாவியார் பற்றிய செய்திகளில் எது தவறானது?
a) இவர் திணைமாலை நூற்றைம்பது என்ற நூலை எழுதியுள்ளார்.
b) இவரின் காலம் கி.பி 5 -ம் நூற்றாண்டு
c) இதில் மொத்தம் 350 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
d) இவற்றின் திணைவரிசை குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசையில் அமையும்.
5. பொருத்துக :
A. சேரருள் – 1. ஐம்பெருங்கோசர்
B. சோழருள் – 2. நன்னன்
C. பாண்டியருள் – 3. மானவிறல் வேர்
D. கோசருள் – 4. பழையன்
A B C D.
a) 2 4 3 1
b) 1 2 3 4
c) 4 3 2 1
d) 2 4 1 3
6. திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்று குறிப்பிட்டவர்?
a) ஆதிசங்கரர்
b) ஆதிநாராயணன்
c) சங்கராச்சாரியார்
d) அருள்மிகு கோதண்டராமர்
7. கொடுக்கப்பட்டவற்றைக் காண்க:
I. பக்திப் பாடல்களாக சிறப்பு பெற்றவை திருவாசகத்தில் உள்ள 650 பாடல்கள்.
II. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர் ஜி.யு.போப்.
III. சைவர்களின் வீடுதோறும் வழிபாட்டு சமயங்களில் திருவாசகம் பாடப்படுகிறது.
இவற்றில்.
a) I மட்டும் சரி
b) அனைத்தும் தவறு.
c) II மட்டும் சரி
d) அனைத்தும் சரி
8. பாரதிக்கு ‘மகாகவி’ என்ற பட்டம் கொடுத்தவர்?
a) வ.ராமசாமி ஐயங்கார்
b) ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார்
c) ஏ.வி. மெய்யப்பன் செட்டியார்
d) நாமக்கல் கவிஞர்
9. பட்டியல் I – ஐ பட்டியல் II உடன் இயற்பெயர்களைக் கொண்டு சரியாகப் பொருத்துக.
பட்டியல் – I பட்டியல் – II
A. மாணிக்கவாசகர் – 1. காழி வள்ளல்
B. சுந்தரர் – 2. நம்பி ஆரூரர்
C. திருநாவுக்கரசர் – 3. திருவாதவூரர்
D. திருஞானசம்பந்தர் – 4. மருள் நீக்கியார்
குறியீடுகள் :-
A B C D.
a) 3 2 4 1
b) 3 2 1 4
c) 4 3 2 1
d) 3 4 2 1
10. சாகித்திய அகாடமி விருது பெற்ற கண்ணதாசனின் புதினம் எது?.
a) மாங்கனி
b) ஆயிரம் தீவு
c) வேலங்குடி திருவிழா
d) சேரமான் காதலி
tnpsc portal
11. பின்வரும் வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : நாராயண கவி மதுரையில் வாழ்ந்த போது கலை வாணரோடு தொடர்பு உண்டானது.
காரணம் (R) : உடுமலை கவி, கலைவாணரின் தொடர்பால் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் முதலியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது .
a) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) -விற்கான சரியான விளக்கம்.
b) (A) சரி, ஆனால் (R) தவறு
c) (A) தவறு, ஆனால் (R) சரி
d) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
12. பட்டியல் I – ஐ பட்டியல் II உடன் பொருத்துக :
பட்டியல் – I பட்டியல் – II
(நூல்) (ஆரிசியர்)
A. புதுக்குரல்கள் – 1. பசுவய்யா
B. வாடிவாசல் – 2. தருமு சிவராமு
C. மேல் நோக்கிய – 3. ந. பிச்சமூர்த்தி
பயணம்
D. தண்ணீர் – 4. சி.சு. செல்லப்பா
A B C D.
a) 3 4 2 1
b) 4 3 1 2
c) 3 2 4 1
d) 1 2 4 3
13. ஒளிப்படம் எடுக்கும் முறை வெளிவந்த ஆண்டு ?.
a) 1835
b) 1840
c) 1850
d) 1830
14. பின்வரும் கூற்றுகளில் சரியான கூற்றினை தேர்ந்தெடு :
a) ந.பிச்சமூர்த்தி ‘ஹனுமன்’ என்ற பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
b) ந. பிச்சமூர்த்தி 1955 முதல் 1964 வரை ” நவ இந்தியா” பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
c) ந. பிச்சமூர்த்தி சிறுகதை எழுதத் தொடங்கி புதுக்கவிதையில் தமது படைப்பாற்றைலை வெளியிட்டவர்.
d) மேற்கூறிய கூற்றுகள் அனைத்தும்.
15. ஹிஸ்ஸின் கற்றை எப்பகுதியில் தோன்றுகிறது?
a) சைனு – ஆரிக்குலார் முடிச்சு
b) இடை – வெண்டிரிக்குலார் தடுப்புச்சுவர்
c) பர்கின்ஜி – திசு
d) ஏட்ரியோ – வெண்டிரிக்குலார் முடிச்சு
16. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்தக்குடி” என தமிழகத்தின் தொன்மையைக் குறிப்பிடும் நூல் ?.
a) நளவெண்பா
b) புறப்பொருள் வெண்பாமாலை
c) சங்க இலக்கியங்கள்
d) இலக்கண நூல்கள்
17. பின்வருவனவற்றுள் கப்பலைக் குறிக்காத வேறு தமிழ்ச் சொற்கள் எவை?
1. தெப்பம் 2. திமில் 3. அம்பி 4. வங்கம் 5. மிதவை 6. பஃறி 7. ஓடம்.
a) 1 மற்றும் 4
b) 2, 3 மற்றும் 6
c) 4, 6 மற்றும் 7
d) மேற்கண்ட எதுவுமில்லை
18. தொடரும் – தொடர்பும் :
தொடர் சான்றோர்
A. புரைநீர் நல்லறம் – 1.பாரதிதாசன்
போற்றிக் கேண்பின்
B. தமிழ்நாட்டின் – 2.சீத்தலைச்சாத்தனார்
இரசூல் கம்சதோவ்
C. என் கடன் பணி – 3.ஔவையார்
செய்து கிடப்பதே
D. அணுவைத் துளைத் – 4.திருநாவுக்கரசர்
தேழ் கடலைப்புகட்டி
A B C D
a) 1 2 3 4
b) 2 1 4 3
c) 3 4 2 1
d) 4 3 1 2
19. “வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளை” என்பதன் பொருள் யாது?
a) நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
b) நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு
c) கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டு
d) இவை எதுவும் இல்லை
20. “ஒரு பைசா தமிழன்” எனும் வார இதழை நடத்தியவர் யார்?
a) வ.உ. சிதம்பரனார்
b) தந்தை பெரியார்
c) அயோத்திதாச பண்டிதர்
d) பாரதியார்
tnpsc portal
விடைகள் :
1. b) பாரதியார்
2. c) இந்நூல் உட்பிரிவு இன்றி படலமாக காணப்படும்.
3. d) இரண்டும் சரி
4. c) இதில் மொத்தம் 350 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
5. a) 2 4 3 1
6. a) ஆதிசங்கரர்
7. d) அனைத்தும் சரி
8. a) வ.ராமசாமி ஐயங்கார்
9. a) 3 2 4 1
10. d) சேரமான் காதலி
11. a) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) -விற்கான சரியான விளக்கம்.
12. a) 3 4 2 1
13. d) 1830
14. d) மேற்கூறிய கூற்றுகள் அனைத்தும்.
15. d) ஏட்ரியோ – வெண்டிரிக்குலார் முடிச்சு
16. b) புறப்பொருள் வெண்பாமாலை
17. d) மேற்கண்ட எதுவுமில்லை
18. b) 2 1 4 3
19. a) நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
20. c) அயோத்திதாச பண்டிதர்
tnpsc portal
TNPSC – ன் இணையதள முகவரி – www.tnpsc.gov.in
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE