Tnpsc question papers – TNPSC தேர்வு வினா – விடைகள்
பொதுப்பாடங்கள் (பொதுஅறிவு) : –
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் TNPSC தேர்வில் (tnpsc question paper) புதிய விதிமுறைப்படி Group-IV & II / II-A முக்கியமான கேள்விக்கள் அடங்கிய மாதிரி வினா – விடைகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC Question Paper Part -7
1. இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை சுபாஷ் சந்திர போஸிடம் ஒப்படைத்தவர் ?
a) சர்தார் பட்டேல்
b) ஜவகர்லால் நேரு
c) மகாத்மா காந்தி
d) வ.உ. சிதம்பரம் பிள்ளை
2. 1907 – ம் ஆண்டு பிபின் சந்திரபாலை மெட்ராஸிற்கு அழைத்து வந்தவர் ?
a) வ.உ.சிதம்பரம் பிள்ளை
b) சுப்ரமணிய சிவா
c) பாரதியார்
d) காமராசர்
3. இந்திய தொல்லியல்துறை தொடங்கப்பட்ட வருடம் ?
a) 1861
b) 1862
c) 1863
d) 1865
4. Indian Unrest என்ற புத்தகத்தின் ஆசி வருடம்?
a) H.S ஆல்காட்
b) லாலா லஜபதிராய்
c) தாதாபாய் நௌரோஜி
d) வேலண்டைன் சிரோலி
5. பின்வருபவர்களுள் இரண்டாவது லாகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் ?
a) பகத்சிங் மற்றும் ராஜகுரு
b) பகத்சிங் மற்றும் சுக்தேவ்
c) பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ்
d) பகத்சிங், ஜதீந்திரநாத் தாஸ், ராஜகுரு மற்றும் சுக்தேவ்
Tnpsc question papers with answer
6. பின்வரும் எந்த காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் சைமன் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது?
a) பம்பாய் மாநாடு 1921
b) மெட்ராஸ் மாநாடு 1927
c) கல்கத்தா மாநாடு 1928
d) சூரத் மாநாடு 1928
7. கப்பலின் ஒட்டகம் எனப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் மனிதர்?
a) அக்பர்
b) ஹீமாயூன்
c) ஷாஜகான்
d) ஔரங்கசீப்
8. Sea Vigil பின்வரும் எதனுடன் தொடர்பு உடையது?
a) ஆழ்கடல் மீன்பிடி கப்பல்
b) புயல் முன்னெச்சரிக்கை செயலி
c) கடலோர பாதுகாப்பு ஒத்திகை
d) கடலோர பேரிடர் மேலாண்மை திட்டம்
9. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் அறிவிக்கப்பட்டது எப்போது?
a) ஜனவரி 1, 2019
b) ஜனவரி 31, 2019
c) பிப்ரவரி 1, 2019
d) மார்ச் 1, 2019
10. தமிழ்நாட்டில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்
a) அரியலூர்
b) இராமநாதபுரம்
c) நாகப்பட்டினம்
d) திருநெல்வேலி
tnpsc question paper
11. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக : –
கூற்று 1 : ஹெலினா என்பது இந்தியாவின் ஹெலிகாப்டர் உதவியுடன் ஏவக்கூடிய ஏவுகணை வகையைச் சேர்ந்தது.
கூற்று 2 : DRDO – வினால் இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டது.
a) 1 மட்டும்
b) 2 மட்டும்
c) 1 மற்றும் 2
d) இவற்றுள் எதுவுமில்லை
12. கோள்களை உருவ அடிப்படையில் வரிசைப்படுத்துக:
a) சனி, நெப்டியூன், யுரேனஸ், வியாழன்
b) வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ்
c) நெப்டியூன், சனி, யுரேனஸ், வியாழன்
d) சனி, நெப்டியூன், வியாழன், யுரேனஸ்
Tnpsc question papers
13. பின்வரும் வாக்கியங்களைக் கவனி :
உறுதி (A) : தேயிலை மற்றும் காப்பி இவை இரண்டும் நீலகிரி மலையில் விளைகிறது.
காரணம் (R) : இரு பயிர்கள் விளைதலுக்கும் ஒரே விதமான காரணிகள் தேவைப்படுகிறது.
a) (A) மற்றும் (R) சரி
b) (A) மற்றும் (R) சரி, என்பது (A) – க்கு சரியான விளக்கமல்ல.
c) (A) சரி, ஆனால் (R) தவறு
d) (A) தவறு, ஆனால் (R) சரி
14. சித்திரை முதல் தேதியை தமிழ் புதுவருட நாளாக அறிவித்தவர்
a) காமராசர்
b) எம்.ஜி.ஆர்
c) அறிஞர் அண்ணா
d) இவருள் எவருமில்லை
15. கீழ் காணப்படுபவர்களில் தமிழ்நாடு அரசு மத்திய – மாநில உறவுகளில் மாற்றங்கள் செய்து தொடர்பாக ஆய்வு செய்து, பரிந்துரைகள் வழங்கும் பொருட்டு அமைந்த குழுவிற்கு தலைமை தாங்கியவர் யார் ?
a) முனைவர் ஏ. லட்சுமணசாமி
b) நீதியரசர் ஆர்.எஸ்.சர்க்காரியா
c) நீதியரசர் பி.வி.ராஜமன்னார்
d) முனைவர் பி.சந்திரா ரெட்டி
tnpsc question papers 2022
16. வலுவான வேளாண்மை விலைக் கொள்கையின் குறிக்கோள்கள் யாது / யாவை ?
i) தனியார் வணிகர்களின் சுரண்டல்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பது.
ii) விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை வழங்குவதை உறுதி செய்தல்.
iii) நியாயமான விலையில் மொத்த வணிகர்களுக்கு விவசாயப் பொருட்களை போதுமான அளவிலும், தொடர்ச்சியாகவும், வழங்குவதை உறுதி செய்தல்.
a) (i) மட்டும்
b) (ii) மட்டும் (iii) மட்டும்
c) (i) மட்டும் (ii) மட்டும்
d) (i) மட்டும் (iii) மட்டும்
17. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
கூற்று (A) : பொன்னிக்குக் கரை கண்ட பூபதி என கரிகால் சோழன் சிறப்பிக்கப்படுகிறான்.
காரண் (R) : நீரை நெறிப்படுத்தும் வாய்க்கால்களால் இணைக்கப்பட்ட தலை சிறந்த கற்கட்டுமானமாகிய கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது.
a) (A) சரி ஆனால் (R) தவறு.
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) – விற்குச் சரியான விளக்கமாகும்.
c) (A) மற்றும் (R) இரண்டும் தவறு.
d) (A) தவறு. ஆனால் (R) சரி.
18. NADP குறிப்பது – ?
a) நிக்கோடின் அடினைன் டை நியூக்ளியோடைடு பைருவேட்
b) நைட்ரேட் அமைன் டை சாக்கரைடு பாஸ்பேட்
c) நிக்கோடினமைடு அடினைன் டை நியூக்ளியோடைடு பாஸ்பேட்
d) நைட்ரஸ் அடினைன் டை பாஸ்பேட்
19. ரூமாடிக் இதய நோய் ஏற்படக் காரணமான உயிரி?
a) ஸ்டிரெப்டோ காக்கஸ் பாக்டீரியா
b) ஸ்டைப்பலோ காக்கஸ் பாக்டீரியா
c) டிப்ளோகாக்கஸ் பாக்டீரியா
d) மேற்கண்ட எதுவுமில்லை
20. நெஃப்ரானின் எப்பகுதியில் குளுக்கோஸ் மீண்டும் உறிஞ்சப்படுகிறது ?
a) சுருண்ட அண்மைக் குழல்
b) ஹென்லியின் வளைவு
c) சுருண்ட சேய்மைக் குழல்
d) சேகரிக்கும் குழாய்
விடைகள் : –
1. d) வ.உ. சிதம்பரம் பிள்ளை
2. c) பாரதியார்
3. a) 1861
4. d) வேலண்டைன் சிரோலி
5. d) பகத்சிங், ஜதீந்திரநாத் தாஸ், ராஜகுரு மற்றும் சுக்தேவ்
6. b) மெட்ராஸ் மாநாடு 1927
7. a) அக்பர்
8. c) கடலோர பாதுகாப்பு ஒத்திகை
9. c) பிப்ரவரி 1, 2019
10. a) அரியலூர்
11. c) 1 மற்றும் 2
12. b) வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ்
13. c) (A) சரி, ஆனால் (R) தவறு
14. c) அறிஞர் அண்ணா
15. c) நீதியரசர் பி.வி.ராஜமன்னார்
16. c) (i) மட்டும் (ii) மட்டும்
17. b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) – விற்குச் சரியான விளக்கமாகும்.
18. c) நிக்கோடினமைடு அடினைன் டை நியூக்ளியோடைடு பாஸ்பேட்
19. a) ஸ்டிரெப்டோ காக்கஸ் பாக்டீரியா
20. a) சுருண்ட அண்மைக் குழல்
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT