tn jobs

தமிழக காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு -tnusrb 2022

 இது குறித்த விபரம் வருமாறு.

tnusrb

பணியின் பெயர் : Sub-Inspectors of Police 

மொத்த காலியிடங்கள் : 444

காலியிட பகிர்வு : 

1. Sub-Inspector of Police (Taluk) – 399

Men – 279 

Women – 120

2. Sub-Inspector of Police (Armed Reserve) – 45

Men – 32

Women / Transgenders – 13

சம்பளவிகிதம் : ரூ. 36,900 – 1,16,600

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முறையான கல்வித் திட்டத்தின் கீழ் பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

tnusrb

தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செ்ய்யப்படுவர். NSS, NCC பயிற்சி பெற்றவர்களுக்கு சிறப்பு தகுதிக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும்.

1. எழுத்துத்தேர்வு : இத்தேர்வில் General Knowledge, Psychology மற்றும் விண்ணப்பதாரின் தமிழ் மொழியறிவை பரிசோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.

2. உடற்தகுதி : 

i) குறைந்தபட்ச உயரம் : ஆண்கள் : 170 செ.மீ (SC / ST / SCA – 167 செ.மீ)

ii) மார்பளவு : சாதாரண நிலையில் 81 செ.மீ அகலம் இருக்க வேண்டும். விரிவடைந்த நிலையில் 86 செ.மீ. இருக்க வேண்டும்.

iii) குறைந்தபட்ச உயரம் : பெண்கள் / திருநங்கைகள் : 159 செ.மீ இருக்க வேண்டும். ( SC / ST / SCA பிரிவை சேர்ந்த பெண்கள் குறைந்தபட்சம் – 157 செ.மீ )

உடற்திறன் திறன் தேர்வு : 

ஆண்கள் : 

1. 7 நிமிடத்தில் 1500 மீட்டர் தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். 

2. 5 மீட்டர் கயிறு ஏறுதல, 3.80 மீட்டர் நீளம் தாண்டுதல், 1.20 மீட்டர் உயரம் தாண்டுதல், 5 மீட்டர் குண்டு எறிதல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

பெண்கள் : 

1. 400 மீட்டர் தூரத்தை 2.30 நிமிடங்கள் ஓடி முடித்தல், 3 மீட்டர் நீளம் தாண்டுதல், 4.25 மீட்டர் குண்டு எறிதல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். 

tnusrb

மேற்கண்ட தேர்வுகள் அனைத்தும் நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்ளுக்கு தெரிவிக்கப்படும். 

எழுத்துத்தேர்வு தோராயமாக ஜீன் 2022 – ல் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.tnusrb.tn.gov.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்