NIACL

(Bank Of Baroda) பரோடா வங்கியில் மேனேஜர் வேலைவாய்ப்பு -bank of baroda recruitment 2022

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank Of Baroda – வில் கீழ்வரும் (bank of baroda recruitment) பணிகளுக்கு 105 பேர் தேவைப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

bank of baroda recruitment

1. பணியின் பெயர் : Manager (Digital Fraud / Fraud Risk Management 

காலியிடங்கள் : 15 

வயதுவரம்பு : 24 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / IT / Data Science பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது B.Sc (Computer Science) / B.Sc (IT / BCA / MCA) போன்ற ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Credit Officer (MSME Department)

காலியிடங்கள் : 40

வயதுவரம்பு : 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Finance / Banking / Forex / Credit போன்ற ஏதாவதொரு துறையில் முதுநிலைப் பட்டம் அல்லது CA / CMA / CFA போன்ற ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கி / நிதி நிறுவனங்களில் Analyst ஆக 7 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Credit Officer (Export & Import Business)

காலியிடங்கள் : 20

வயதுவரம்பு : 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Finance / Banking / Forex / Credit பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது CA / CMA / CFA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும்  8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Forex Acquisition & Relationship Manager (Corporate Credit Departments)

காலியிடங்கள் : 30

வயதுவரம்பு : 26 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Marketing / Sales – துறையில் முதுநிலை பட்டப்படிப்புடன் குறைந்தது 3 முதல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

bank of baroda recruitment

குறிப்பு :

1. Manager (Digital Fraud / Fraud Risk Management) பணி தவிர இதர பணிகளுக்கு ஏதாவதொரு பட்டப்படிப்புடன் RBI – ஆல் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களில் நல்ல பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் நிரந்தரப்பணி வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வில் Reasoning, English Language, Quantitative Aptitude, Professional Knowledge போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். தமிழ் நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.100.  இதர பிரிவினர்களுக்கு ரூ.600. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.bankofbaroda.co.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

bank of baroda recruitment

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்