rrc recruitment 2021

10 / ITI படித்தவர்களுக்கு சென்னை இரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை

சென்னையிலுள்ள இரயில் பெட்டி தொழிற்சாலையில் (icf recruitment) அப்ரண்டிஸ் பயிற்சிக்கு 10 -ம் வகுப்பு, ITI படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:PB/PR/39/APP 

icf recruitment

1. பயிற்சியின் பெயர் : Trade Apprentice (Freshers/Ex-ITI)

மொத்த காலியிடங்கள் : 792 (Freshers – 208, EX-ITI – 584)

தொழிற்பிரிவு வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

1. Freshers : குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. EX-ITI  :  குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம் : 

1. Freshers பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 2 வருடம் (Welder, MLT (Radiology & Pathology)) தொழிற்பிரிவிற்கு 15 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.

2. EX-ITI விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருடமும்.

icf recruitment

வயதுவரம்பு : 26.10.2021 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும்,  OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  EX-ITI விண்ணப்பதாரர்கள் ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், Freshers விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வி செய்யப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம் மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இணையதளத்திலும் வெளியிடப்படும்.

உதவித்தொகை விபரம் : 

Freshers : ரூ. 6000 (+2 படித்தவர்களுக்கு – ரூ. 7000)

EX-ITI – ரூ. 7000

icf recruitment

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC / ST / PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.pb.icf.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்த ஆன்லைன் விண்ணப்ப நகளுடன் கீழ்வரும் சான்றிதழ்களின் நகல்களை upload செய்து கைவசம் வைத்து கொள்ளவும். தபாலில் எதையும் அனுப்ப வேண்டாம்.

சான்றிதழ்கள் விபரம் :

1. Std. X mark Sheet

2. Birth Certificate

3. Community Certificate for SC / ST / OBC / EWS ( if applicable )

4. Employment Exchange Registration Card 

5. Parent’s Identity Card / Service Certificate (if wards of Railway Employee)

6. PWBD Certificate (if applicable)

7. ITI Provisional & Mark Sheet NCVT / SCVT 

8. Passport Size photo

9. Processing fee Receipt

10. Aadhaar Card

குறிப்பு : ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து புகைப்படம் ஒட்டி கைவசம் வைத்துக் கொள்ளவும். நேர்முகத்தேர்வின் போது அசல் சான்றிதழ்களுடன் இணைத்து சமர்ப்பிக்கவும்.

icf recruitment

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.10.2021

விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்